Sunday, May 15, 2011

*என் தங்கை

நாயே,பேயே எரும,பண்ணி.
இப்படியாக என்னை அழைத்தவள்,
இப்பொழுதெல்லாம்,
அண்ணா,அண்ணா என்று தான் அழைக்கிறாள்.

பேருந்து,விமானம் கப்பல் தொடர்வண்டி,
இப்படியாக பயணித்து,
சலித்தவள் போல என் தோளில் ஏறி பயனிதவள்,
இப்போதெலாம்,
தொட்டாலும், சினுங்குகிறாலே,

எனெனில்,
என் தங்கை ஆனாலும், அவள் 
வளர்ந்து விட்ட பெண் அல்லவா..........


ரத்த சொந்தம் ஆனாலும்,
என் தங்கையை பிரிந்தேன்,
அவள் திருமணத்தின் பொழுது,

ரத்த சொந்தம் ஆனாலும்,
என் தங்கை பிரிந்தால், 
அவள் மகளை.

திருமணத்தின் பொழுது,
மணமகனாக என் மகன்.

                                                       -மீனா விக்னேஷ் 


Tuesday, May 10, 2011

*உன் இஷ்டம்

பின்னொரு நாளில்,

அவள் என்னிடம்,கூறினால்

நான், உன் கால் தூசிக்கும் சமமாக மாட்டேன்,

எப்படியானாலும், நான் உன்னை என் தலைமீது தான் சுமக்கிறேன்,

தூசியாவதும், கிரீடமாவதும்,

உன் இஷ்டம்

                                                                  -மீனா விக்னேஷ்  

ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,

நம்ம டி.ஆர் கிட்ட,
ஒரு காதல் கவிதை கேட்ட,
எப்புடி  சொல்வாரு................


 ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,

ஏ.........நி ஏழு பேர பண்ணாலும் லவ் இல்ல,

நி ஏழாவதுல பண்ணாலும் லவ் இல்ல,

ஏழேழு ஜென்மத்துக்கும் பண்ணுடா,

அது எப்பவுமே இனிக்குனு சொல்லுடா,


ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,

அவ சேத்தாலே உன் பெயர பின்னால,

நி நிக்கணும்டா நல்லவனா அவ முன்னால,

ஊரெல்லாம் பேசுவாண்ட பின்னால,

நல்லதா நி புரிஞ்சுக்கடா  தன்னால....

ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,

                                                   -மீனா விக்னேஷ்

Sunday, May 8, 2011

*செலவு

அன்று ஒருநாள்,தொலைபேசியில்

தமிழகம் முதல்,தாய் திருநாட்டின் 
தலைநகர் வரை.

வாழ்க்கை,வரலாறு,
கலாச்சாரம்,அரசியல்,
மதம்,மொழி.

இவையாவைகளும் பற்றி,
விரியாக உரையாடப்பட்டது,

ஆனாலும் வருத்தம் தான்,
அப்பாவின் காசு,
ஆதிகமாய் செலவாகிறதே.

                                                -மீனா விக்னேஷ்

  

Saturday, May 7, 2011

*சஞ்சலமில்லை

அவர்கள் இருவரும்,
ஆணும்,பெண்ணுமாய்,

கைகள் கோர்த்து,
கால்கள் நெடுக, நடக்கிறார்கள்,

கட்டி அணைத்தார்கள்,
முத்தம் கொடுத்தார்கள்,

ஆடினார்கள்,
பாடினார்கள்,
விளையாடினார்கள்,

ஆனாலும்,
இருவர் மனதிலும்,
கொஞ்சமும் கூட,
சஞ்சலமில்லை.

ஏனெனில்,
அவர்கள் இருவருமே,
குட்டி பசங்க.

                                                   -மீனா விக்னேஷ்     

*காதல் பாடம்

எனக்கு ஆங்கிலம் பிடிக்காது,
                  அவளுக்கோ தமிழ் பிடிக்காது,
எனக்கு கணிதம் பிடிக்கும்,
                அறிவியலும்  பிடிக்கும் ஓரளவுக்கு,
அவளுக்கோ அறிவியல் பிடிக்கும்,
                  கணிதமும் பிடிக்கும் ஓரளவுக்கு,

எங்கள் இருவருக்குமே பிடிக்காதது,
                  பாடமாகிய,
எங்கள் காதல் தோல்வி.
                                 
                                            -மீனா விக்னேஷ்  

Thursday, May 5, 2011

*காதல் பித்தன்

கைகள் கோர்த்து,
கடை வீதியில் வலம் வருகிறாள் அவள்.
அவள் கணவனுடன்,

அவள் என்னுடன் வாழ்திருந்தாள்,
மகிழ்ந்திருப்பேன்,

இன்று அவள் மகிழ்ச்சியை கண்டு,
அதனினும் அதிகமாய் மகிழ்வேன், என
காட்டிய என்,
காதல் தோல்விக்கு நன்றி.

அன்று அவளை விரும்பினேன்,

இன்றும் விரும்புகிறேன்,
அவளை விரும்பச்சொல்லும்,
என் காதலை.

                                                                 -மீனா விக்னேஷ்