சிறுகதைகள்
Tuesday, August 30, 2011
வேட்கை
உன் கை குட்டையின்,
கால்பகுதி வேண்டாம்,
என் கண்ணீர் துடைக்க.
உன் முந்தானை,
முழுவதும் வேண்டாம்,
என் தூக்கம் முடிக்க.
முழுவதுமாகத்தான் வேண்டும்,
உன் அன்பு மட்டும்.
-மீனாவிக்னேஷ்.
Monday, August 29, 2011
புகைபிடிக்கிறேன்
புகைபிடிக்கையில்,
புகையை, பிடிக்க நினைக்கிறன்.
கை நழுவி,
காற்றோடு கலந்து விடுகிறது,
என் உயிரையும் சேர்த்துக்கொண்டு.
தீர்ந்து விட்ட பொருளை,
தேடும் தேடலில்,தொலைந்து போகிறேன் ,
என் விரல் எறியும் புகை மண்டலத்தில்.
- மீனாவிக்னேஷ்.
போதை
மது பழக்கத்தை வெறுக்கிறேன்,
கெட்ட பழக்கம் ஆதலால் அல்ல,
போதையான உன்னை
மறக்க சொல்லுதே ஆதலால் ,
Monday, August 1, 2011
சரியான தவறு
சிறுநீர் கழிக்கும் இடத்தில்
சிகரெட் புகை ஒன்றும் தவறில்லை !!!!
_ க.கார்த்திகேயன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)