Wednesday, September 28, 2011

அனுபவ அறிவு

அம்மாவிடம், 
என் நண்பனின் பெயரைக்கூறிய பொழுது,
அவன் தந்தையின் பெயரையும்,
கேட்டுத்தெரிந்து கொண்டார்,
அவரின் முகவரி அம்மாவிடமிருந்து,

அடுத்த வீட்டுகராரின்,
 முகவரியும் தெரியாத நமக்கு,
ஆச்சரியமாகத்தான் இருந்தது,
அம்மாவின் அனுபவ அறிவை கண்டு.

-மீனாவிக்னேஷ் 

*நம்பிக்கை

உரையாடலின் பொழுது,
உண்மையா,பொய்யா எனத்தெரியாமல்,
பாராட்டுகளும்,கைத்தட்டல்களும் குவிந்தன,

"நான் எப்பொழுதுமே மகிழ்ச்சியாகத்தான் இருப்பேன்"

எனும் என்னுடைய வார்த்தைகளுக்காக, 

கைத்தட்டல்கள் அதிகமானது,

"என் லட்சியம் நிச்சயம் ஜெய்க்கும்"

எனும் என்னுடைய வார்த்தைகளுக்காக,
கைத்தட்டல்களில் காண்கிறேன்,
அடுத்தவரின் நம்பிகையை.

"you must implement" என்கிறார்கள்,
தமிழ் அர்த்தம் அறியாவிட்டாலும்,
உத்வேகமாகதான் இருக்கிறது.

-மீனாவிக்னேஷ் 

Thursday, September 22, 2011

வெகுளி

என்னை சுற்றி சிரிப்பவர்களை கண்டு,
நானும் சிரித்தேன்,
வெகுளியென,
பெயர் சூட்டினார்கள் ,

உண்மை தான்,அவர்களுக்கு,
பெயர் சூட்ட தெரியாத நான்,
வெகுளி தான்.

என்னை சுற்றி சிரிப்பவர்களை கண்டு,
நானும் சிரித்தேன்,
சிறுபிள்ளை என்றார்கள்,

சிரிப்பதை நிறுத்தி கொண்டேன்,
ஆனாலும் வளரவில்லை,
நானும்,என் மகிழ்ச்சியும்.

-மீனாவிக்னேஷ் 

Friday, September 16, 2011

அடர்ந்த காடு

நான் காட்டினுள் தொலைகிறேன் என்றால்,
அதில் சில புத்தகங்கள் வளர்ந்திருக்கும் ,
அது பல சொற்களை உதிர்த்திருக்கும் ,

பிறர் வார்த்தைகளை உரங்களாய் கொண்டு,
ஓவியமாய் வண்ண வண்ண நிறங்களில்,
தினம் தினம் சில பெயர்களை பூக்களாய் பூத்திருக்கும், 

அத்தகைய அடர்ந்த காட்டினுள்,
இன்று புதிதாய் பூக்க துடிக்கும் பெயராய்
                                                               மீனா விக்னேஷ் 

Monday, September 12, 2011

தானம்

ஜாதகத்தில் ஏதோ தோஷமாம்,
சக்கரைபொங்கலும்,
சாம்பார் சாதமும்,
தானமிடுகிறார் ஒருவர்,

தன்னை சுற்றி இருந்த,
எறும்புகளுக்கும்,
பறவைகளுக்கும் சேர்த்து,
தானம் பெறுகிறார் மற்றொருவர்,

அவரிடத்தில் ஜாதகமும் இல்லை,
தோஷமும் இல்லை.

-மீனாவிக்னேஷ்