Saturday, January 8, 2011

நைனா கடை

1

நைனா,
எங்க பகுதியுல ரொம்ப பிரபலமான நபர்,
வயது முதிர்தவர்,ரொம்ப மரியாதையான நபரும் கூட,

சிறுவர்  வட்டாரம் தான், அவர் மேல ரொம்ப மரியாதை வச்சிருந்தது,
ஏன்ந அவரோட கடைல தான் இலவசமா மிட்டாய் கெடைக்கும்,

அந்த, கடையோட வரலாற சுருக்க சொல்லனும்ன,எங்க அம்மாவும் அப்பாவும், அவர் கடை மேல அதிக பிரியம் வச்சிருந்ததா, அவரிடம் அதிக குறும்பு செஞ்சிருந்த  சொல்லி கேட்ருக்கேன்,

காலைல எழுந்ததுல இருந்து,இறவு தூங்குற வரைக்கும்
நெறைய தேவைகள பூர்த்தி செய்யும் அவரோட மளிகை கடை,      
ரொம்பவும் முக்கியமான,அத்யவசயமானதா  இருந்தது,

அவரோட கடின உழைப்பு,நேர்மை இதெல்லாம் தான்,
அவரை, இவ்வளவு நல்ல மனிதரா மாத்தியிருத்தது,

அவர் தெலுகு சமூகத்த சேர்த்தவரு,
அவங்க மொழில  நைனாவுக்கு 
அப்பான்னு அர்த்தம்.

அவர பற்றி தெரிஞ்ச, நெறைய மக்கள் அவர நைனாநு தான் கூப்டாங்க ,
ஆனால், அவர் யாரையும் தன் மகனா நெனச்சது  இல்ல,
உண்மைல, அவரோட  மகனா, இருக்கும்   தகுதிதான்,  யாருக்கும் இல்ல.

முகம் தெரியாத நெறைய நபர்கள், நைனாகிட்ட தன்ன தானே அறிமுகப்படுத்தி கொள்வாங்க,
தேவை  இல்லாம இப்புடி செய்றது அவருக்கு புடிக்காது,ஆனால்
சில தேவைகளோட தான், அவங்க அப்புடி செய்றதா,
நைனாவுக்கு புரியுறதில்ல.

யாரும், ஏது  கேட்டாலும் , அவர் இல்லன்னு சொல்ல மாட்டாரு,
இப்படி கொடுக்க தயாரான மனிதரிடம் கூட ஏமாற்றினால் தான்,
சந்தோசம்நு, நெனைக்கும் மனுசங்கள, எப்படி தன்னோட மக்களா நெனைக்க முடியும்.

அப்படி ஏமாத்துற யாரையும் அவர் கண்டுக்கள்ல,
எவ்வளவு தான் அவர  ஏமாத்திட முடியும்,அவரோட முழு  உழைப்பயும் யாராலும் ஏமாத்த முடியாது.

ஏன் இப்புடி முன்னமெல்லாம் ரொம்ப அதிகமா உழைத்த மனுஷன் இப்பல்லாம் ரொம்பவே களச்சு போய்ட்டாரு,

அவரோட வாழ்க்கைகு அப்பறம் அந்த கடைய எடுத்து நடத்த யாரும் இல்ல,
அந்த கவலை தான் அவர இப்புடி சோர்வடிச்சிரூச்சு.

வாரிசு இல்லாத அவரு யருக்காக உழைக்கனும்,

சரி மொத்தமா கடைய மூடிடலாம்நு நெனச்சா,அதுவும் முடியல,
அந்த கடையே  கதின்னு, இவ்வளவு நாளும், உழைச்ச உழைப்பு, 
கெட்ட பழக்கமாகி ,அவர விடாம புடிச்சிருந்தது.

அவருக்கு மகனோ, மகளோ இருந்திருந்தாலும்,
படிப்பு,வேலை,கல்யாணம்நு சொல்லி, ஏமாறத்தான் வேணும் ,
கடைசி காலங்கள ஏமாந்து போகதான் எல்லாத்தையும் சேர்கிறோம்,
ஏமாந்து போறத மகிழ்ச்சியா  ஏத்துகிறது தான் நிம்மதி.......

2

முருகேசன் ரொம்ப சின்ன வயசுலேயே அப்பா,அம்மாவை இழந்துட்டான்
படிக்க வழி இல்லாம,சாப்பாடு இல்லாம, நைனாகூட சேந்தது அதிஷ்டம் தான்.

நைனாவிடம் இருந்த, கெட்ட பழக்கம், அப்புடியே அவனுக்கும் வந்திருச்சு,
அதான், அதிகமா   உழைக்கிற பழக்கம்.

கடைய விட்ட ஒண்ணுமே தெரியாது ரொம்ப அப்பாவியா வளந்தான்.

அவனோட எல்லா தேவையும், நைனாவுக்கு தெரிஞ்சிருந்தது,

சரியான வயசுல, அவனுக்கு, ஒரு வாழ்கை, அமைச்சு குடுக்க ,நைனா தவறவிடல.

எல்லாமே சரியாய்,நடந்தது முருகேசனோட கல்யாணம்,
அவனோட குழந்த சக்தி,

சக்தி, வளர வளர, முருகேசனுக்கு  நெறைய லட்சியம் , கனவுகள் ,வளர
ஆரம்பிச்சது,

எல்லாமே சக்தி, எப்போ பார்த்தாலும் சக்தி நைனா மாதிரி ரொம்ப மரியாதையான மனுஷன் ஆகணும்,

நைனாவும் கூட, ரொம்ப சந்தோசப்பட்டாறு,ரொம்பவே நல்லா வளந்தான்.

வணிகமும்,பொருளாதாரமும் படிச்சான், படிப்பு,கல்லூரி,நகரம்,உணவு,பழக்க வழக்கம் ,சக்திய ரொம்பவே மாத்திரிச்சு.

கெட்டவனா மாறல,அதுவரைக்கும் சந்தோசம் தான்,

தன்னோட அப்பாவும்,நைனாவும்,அதிகமா ஏமாந்து போறாங்க,
வணிகம் செய்ய தெரியலநு, நெனச்சான்,
அது சரி தான். ஆனால்,
உண்மையில், வணிகம் தெரியாம அவங்க ஏமாறல.

அப்பா, நைனா இவங்க கூட சேர்ந்து இறுக்க,சக்தி கொஞ்சமும்,விரும்பல,

கல்லூரி படிக்கும் பொழுது,ஒரு பெண்ண காதலிசிருந்தன்,
அவல கல்யாணம்,பண்ணிகிட்டான்,சக்தியோட,
மாமனார் அவனுக்கு சொந்தமா,ஒரு சூப்பர் மார்க்கெட் வச்சு குடுத்தாரு, 

அவனோட கல்யாணமும்,கடையும் முருகேசனையோ, நைனாவையோ,
எந்த விதத்துலயும் பாதிக்கல, சக்தி தன்னோட வாழ்க்கைய,சரியாய்
வாழ்றத நெனச்சு,ரொம்ப சந்தோஷ பட்டாங்க..

முருகேசனும்,தொடர்ச்சியா நைனாகூடயே இர்ருந்து வந்தான்.

பொல்லாத உலகம்,சக்தியோட மனச, மெல்ல மெல்ல கெடுத்துச்சு,

தன்னோட அப்பா, வயசான காலத்துல, நைனா கடைல ரொம்ப
கஷ்டபடுறத நெனச்சு,தன்னோட வச்சிக்க,ஆசைப்பட்டான்,

எதுவுமே தவறில்ல,எல்லாத்துக்கும் சரி,சக்தியோட ஆசைக்காக,

நைனாவே முருகேசன,சக்தி கூட அனுப்பி வச்சாரு,

  3

சக்தியோட கடைல, எல்லாமே ரொம்ப வித்தியாசம், தரை,சுவர்,ஜன்னல்,கண்ணாடி எல்லாமே,ரொம்பவும்,பள பளப்ப,
இருந்தது அதே,போல தான் அங்கே வேலை செய்யும்  மனிதர்களும்,
வியர்வை இல்ல,வெற்றி இல்ல,களைப்பு இல்ல,களிப்பு இல்ல,
இயந்திரத்துக்கும் மோசமான வேலை,

இதை எல்லாம் ,மொத்தமா மாத்திடலாம் என,வேட்டியா மடிச்சு கட்டினா,எல்லாரும் சிரிக்கிறாங்க,
சக்தியும் கடுமையா, கட்டு படுத்துறான்,
நாட்கள் போக ,போக ,சக்திக்கு, அப்பாவின் நடவடிக்கையே புடிக்கல,
கடுமையான வார்த்தைகள்,கவலை,

நைனாவிடம் ஒரு நாளும், யாரும் அழுததில்லை,முருகேசன் அழுதான்,
நைனாவை விட்டு வந்ததுக்காக.

மனசெல்லாம் ஏதோ வெறுமையா உணர்தது,அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேகுறதா நெனச்சிகிட்டு கெளம்பிட்டான்..

நைனா விட்டுக்கு வருவது யார இருந்தாலும்,ரொம்பவும் சிறப்பா,வரவேற்கும் பழக்கம் உண்டு.

அந்த நாள் நெறைய, விருந்தினர்கள் வந்திருந்தாங்க, ஆனா அவரால,
யாரையும் வரவேற்க முடியல, தன்னோட உயிரையும்,
யாருக்கோ தானம் ,கூடுத்துட்டாறு போல,
அங்கு இருந்த, அத்தனை பேர் கண்களையும் தண்ணீர்.

முருகேசன், தான் நெனச்ச மாதிரியே அவர்,கால்ல விழுந்து அழுகதான்,செஞ்சான் ,

முருகேசன்,நைனாவ விட்டு போகும் போதும்,அந்த கடை தான் ஆறுதல்,
முருகேசனை விட்டு நைனா போகும் போதும்,அந்த கடை தான் ஆறுதல்,

தன்னோட வாரிசா முருகேசன அந்த கடைய,நடத்த சொல்லி இருந்தாறு,
கடைய சரியாய் பாத்துக்க சொல்லும்    கடிதம் ,ரொம்பவும் பெரியது .

ஆனால் அது முருகேசனுக்கு தேவை இல்ல,நைனா ஆசைப்பட்டத விட,
ரொம்ப நல்லாவே முருகேசனால பாத்துக்க முடிந்தது,

முருகேசன் தன்னோட பையன் சக்தி கிட்ட, நெறைய தொழில் நுணுகங்கள,தெரிஞ்சிருந்தான்,

அத்தனையும் பிரதிபலிக்க,முருகேசனுடையதும் ,ஒரு பெரிய சூப்பர் மார்கெட்ட 
மாறிப்போனது ,

முருகேசன் கடைக்கு, ஒரு வித்தியாசம் மனிதாபிமானம் இருந்தது,கடைக்கும் வேல பாக்ரவங்களுகும்,
ஒரு உறவு இருந்தது,,
இவ்வளவு  வெற்றி அப்பறமும் முருகேசனால் சந்தோசமா இறுக்க முடியல,

சக்திய பத்தி ரொம்ப கவலைப்பட்டான்,

சக்தியும் மனசு மாறி அவங்க அப்பாவ, புரிஞ்சுக்கும் நாள் அவருடைய
 இறக்கும் நாளை இருக்குமோ .............

                                                                                              -மீனா விக்னேஷ்