காதலின் வரலாற்று பக்கங்களின் ஒவ்வொருவரும் ராஜாக்களே , ராஜ்யங்கள் ராஜாக்களை ஆள்கிறது . இனி நான் அறிந்த சில வரலாற்று பக்கங்களைப் பற்றி பேசுவோம்.
என் பள்ளி பாடத்தில் அப்துல்காலம் பற்றின ஓர் உரைநடை பகுதி இருந்தது,
அதில் "ஒரு மனிதன், எத்தகைய சூழ்நிலையிலும், எந்த ஒரு சாதனையையும் செய்துவிட முடியும் அதுவே உள்வளத்திறமை என்பது" எனச் சொல்லியிருப்பார்,
அதே போல "கனவு காணுங்கள், கனவுகளை நனவாக்க நாள்தோறும் முயலுங்கள்" என்பது அவர் பொன்மொழிகளுள் ஒன்று.
உண்மையில் நம் இளசுகள், உள்வளத்திறமை மிக்கவர்களாகத் தான் இருக்கிறார்கள், நிறைய கனவும் காண்கிறார்கள். ஆனால்அவர்கள் பயிலவும், போராடவும் துடிக்கும், கடினமான பாடமாகிறது காதல்
யாரிடமாவது ஓரிரு நாட்கள் நட்பாக பழகினால் போதும் "அப்பறம் நீங்க யார லவ் பண்றிங்க ?" எனும் கேள்வி எழாமலிருக்காது,
கொஞ்சம் வயது கடந்த பின்பு " அதெல்லாம் இல்லங்க" எனும் பதில், பொதுவானதாக தெரியலாம் ஆனால் பதின்பருவத்தில் அப்படியில்லை, தாழ்வுமனப்பான்மை மிக்கதாகவும், வெகுளித்தனமானதாகவும் தோற்றமளிக்கும் அப்பதில்.
அப்படியான பதின்பருவத்தில்,என் பள்ளி தோழன் ஒருவன், மகா கலைஞனாக இருந்தான், எந்த பெண்னையும் தன்னால் மடக்கிவிட முடியும் என்பது அவன் கலை வடிவம். சில நிகழ்வுகளில் அதை நிரூபித்தும் காட்டுவான்.
பதின்பருவம் கடந்து, வயது கூடவே, அவன் கலையை மெல்ல அவமதிக்க தொடங்கியபோது அவனே சில சூழ்ச்சிகளை அவிழ்க்கத் தொடங்கினான்.
ஒரு பெண் கேட்குமாறு தொடர்ந்து தன் மிதிவண்டி மணியொலிக்க வேண்டும், செய்வது யார் என தெரியும் படி அவளின் முன்னும் பின்னுமாக, சில நாட்கள் வரை வட்டமடித்து தொடர வேண்டும், கடைசியாக அரங்கேற்ற நாள்.
கூடியிருக்கும் நண்பர்களுக்கு, தன் காதலி என அவளை அடையாளம் காட்டுவான்,
இத்தனை நாள் வரை தன்னை தொடரும் மணியோசையை, அவள் அன்றும் எதிர்பார்த்திருப்பாள், எனவே முதல் மனியோசையே அவளை புன்னகையுடன் திரும்பிப் பார்க்க செய்யும், இதற்கு மேல் அனைத்தும் நம் கற்பனையே.
பெருமிதம் கொண்ட அவன் முகம், அவளின் வெட்கப்புன்னகை, எண்களின் வியந்த கண்கள், மூன்றும் புகைப்படங்களாக, பிரமாண்டமாக மனத்திரையில் விரியும்.
அவன் எங்களிடத்தில் ஹீரோ-வாக போதுமான அம்சம் அவை,
அடுத்த நொடிய வேறு ஒரு திசையில், வேறு பெண்ணை தேட தொடங்கிடுவான். தமிழகத்தையும், இந்தியாவையும் காப்பாற்றிய ஹீரோக்களை விட, காதலில் உருகி வழியும், ஹீரோக்களே பதின்பருவ மனதில் கச்சிதமாக பதிந்தார்கள்.
இதில் என்ன பரிதாபம் என்றால், இத்தகைய செய்கைகளை, காதல் என நம்பி ஏமாறும் பெண்களும் உண்டு.
காதல் ராஜ்யத்தில் ,வெறுமென கத்தி சுற்றுபவர்களையும், குதிரை பயணம் செய்பவர்களையும் அலெக்ஸாண்டராக ஏற்று கொள்கிறார்கள் சில அரசிகள்
இப்படித்தான் என காதலை விவரிக்கவே முடியாது,சில காதல் கண்டதுமே கொண்டதாய் இருக்கலாம், சில பழகி பிறந்ததாய், முதிர்ச்சியில் முளைத்ததாய், சில செல்ல சண்டைகள் சார்ந்ததாகவும் இருக்கலாம்.
நான் அறிந்த முதல் ஹீரோ, அப்பாவுடனும் ஓர் காதல் சரித்திரம் இருக்குமென தோன்றியதில்,
எல்லோரிடமும் கேட்பது போலவே, எதேர்சியாக அப்பாவிடமும் கேட்டுவிட்டேன்.
"அப்பா நீங்க யார லவ் பண்ணிங்க" எந்த பதிலும் பேசாமல், புன்னகையோடு தன் வேளையில் முழ்கியிருந்தார், எங்கள் வீட்டுராஜா.
அம்மா என்னை செய்கையால் அழைத்து ,என் சிறுவயது பள்ளி ஆசிரியை பற்றின நினைவுகளை தூர்வாறினார். எதோ ஒருவகையில் அந்த ஆசிரியை எனக்கு சொந்தம் என தெரியும், அன்று தான் அப்பா வழி சொந்தம் என தெரிந்து கொண்டேன்.
அப்பாவை சீண்டியவளாக அவர்மீது பெருமிதம் கொண்ட பார்வை பதித்தாள் அம்மா, அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்ல புன்னகைத்து கொண்டனர்.
தன் பெற்றோர்களுக்கிடையான காதலை காணும் மகனாக நான் பாக்கியசாலியே.
முதிர்ந்த காதல் ,முந்தய காதலை பற்றி எதையும் கண்டுகொள்வது இல்லை.
என்றைக்கும் நம்பிக்கை அற்று நிர்கதியாய் நிற்பதில்லை .
முதிர்ச்சி இல்லாத நம் பலவீ னமே தன் காதல் ராஜ்யத்தை இழக்க காரணமாகிறது.
அப்பாவின் காலத்தில் இருந்தது போல் இல்லை, எங்களின் காலம் கொஞ்சம் முன்னேறியே இருந்தது , எங்களின் தரிசனத்துக்காக சில அம்மன் சிலைகள் தெருவில் இறங்கி நடப்பதுண்டு ,ஆனால் அவர்களே உண்மை சிலைகளை போலத்தான் ,வரம் கொடுக்கவோ பேச்சு கொடுக்கவோ துணிவதில்லை.
நட்பு பழகி பின்னர் அதையே காதலாக மாற்றும் திறனெல்லாம் இல்லை.
தவறி யாரவது ஒரு பெண் நட்புடன் பழகினால் அவளை சரியான கிராக்கி, என சொல்லித் திரியும் என் வட்டாரம்.
அப்படியாக பெயர் பெற்றிந்த ஒரு பெண்ணிடம், இனி நீ ஆண்களுடன் பேச வேண்டாம் என கூறினான் ஒரு நல்ல நண்பன்.
ஏன்? என அவள் கேட்ட பொழுது ,மென்மையாகவும், நன்மையாகவும், இயல்பினை எடுத்துரைத்தான்.
சில காலம் கழித்து அவர்களுக்குள்ளே, ஓர் நல்ல காதல் பூக்க தொடங்கியது,
அவர்கள் காதலை நான் அறிந்த உண்மை காதல் என்பேன்.
அதீத அன்போடு ,அக்கறையான ராஜாவும், அவனை அதிகம் கொஞ்சும் ராணியும் வேண்டும் ,காதல் ராஜ்யத்தில்.
ஏன்?!.... காதலை இவ்வளவு புனிதமாக கருதினோம் என தெரியவில்லை,
சுக,துக்கங்களுக்கும் முன்னால் காதலெனும் உணர்வு தொடங்கி விடுகிறதா!,
ஆம் அனால் அதற்கும் முன்னோடியாக மனிதர்களிடத்தில் வலுப்பெறும் ஓர் உணர்வு உண்டென சொல்கிறது என் மனம், அது காமம். வார்த்தைகளுக்குபொருளறியாத வயதிலே தொடங்கிடும் அவ்வுணர்வு, அதோடு பதின்பருவத்தில் தன் முழு ஆதிக்கம் செலுத்துகிறது.
நட்போடு பழக பெண்கள் பயப்படுவதே இதற்காகத்தான், எல்லா பெண்களும் பொதுவாக வன்புணர்ச்சிகளுக்கு ஆளாகிறார்கள் என கூறுகிறது ஓர் ஆய்வு,
இதனாலே யாருடனும் பேசாத, பயந்த வழுவிழந்த மனநிலையை அவர்களுக்கு தருகிறதோ என்னமோ,
இத்தனையும் மீறி சிலர் நட்போடு பேசிப்பழகினால், அவர்களையும் தங்களோடு இணைத்து தவறான வார்த்தைகளை பேசி, பெருமை கொள்கிறது ,
தன் வளைவுகளுக்கெல்லாம், வளைய மறுத்தால், தைரியமாக அரை லிட்டர் ஆசிட் அடிக்கிறது , இவ்வக்கிரம் மிக்க ஆணாதிக்கம்.
இதனால் ஆணாதிக்கம் மட்டுமே, காதல் சாம்ராஜியத்தை சரிப்பதாக கருத வேண்டாம். சில பெண் தந்திரங்களும் இதனை நிகழ்த்துவதுண்டு.
அம்மா, அப்பா, தன் உறவுகள் அனைத்தையும் , தனக்கான துணை தேடித் தரும், தகுதி இல்லதவைகளாய் கருதி, மகா சிறப்பு மிக்க முகநூல் வலைத்தளத்தில் துணை தேடினார், ஒரு அண்ணா.
ஒரு பெண், தன் சொந்த மாநிலத்தவள், மாநிறம், அவர் தன் கல்யாணத்துக்கு பார்த்த பொருத்தங்கள் அவ்வளவே.
வலைத்தளத்திலிருந்து மீண்டு ஒருவருக்கொருவர் சந்தித்து கொண்டனர்,
அவர்களுக்குள் காதல் பூத்து, வெகு விரைவிலே, கனிக்கவும், இனிக்கவும் தொடங்கி விட்டது.
அவர்கள் தனிமை வேண்டும் என கருதி, ஒரே திரைப்படத்தை இரண்டு காட்சிகள் முடித்துக்கொண்டு, மிக தாமதமாக எங்கள் அறைக்கு செல்வோம்.
அப்பொழுதும் கூட, கதவு தட்டி திறக்க, உடை மாற்றும் சலனத்துடன் நீண்ட இடைவெளி தேவைப்படும் நிலையில் இருப்பார்கள்.
அவர்கள் மாநிலத்திலும் நிறைய சாதி பிரிவுகள், இருக்கும் போல,
எப்படியும் வீட்டினில் சம்மதிக்க மாட்டார்கள் என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்.
அவர்கள் இருவரின் மனநிலையும், பெற்றோரின் சம்மதம் கேட்பதாக இல்லை.
கல்யாணம் செய்து கொண்டு, தனியே வீடெடுத்து, வாழ்வதென முடிவு செய்தார்கள்.
குறைந்தது பதிவு திருமணமாவது செய்திருக்கலாம், விசாரித்த போது தெரிந்து கொண்டோம், சினிமாவில் காட்டுவது போல் அது அவ்வளவு சுலபமான காரியமல்ல, எனவே தான் அதையும் தவிர்க்க வேண்டியதாயிற்று.
எதுவுமே முறைப்படி இல்லை, ஆனால் அவள் கழுத்தில் தொங்க போகும், தாலி மட்டும் முறைப்படியானதாக இருக்க வேண்டுமென கருதினார்.
தன் மொபைல், பைக் எல்லாம் விற்று ஒன்றரை லட்சம் மதிப்பில் தாழி செய்திருந்தார்,
நண்பர்கள் படை சூழ, கைத்தட்டல்களாக அர்ச்சதை துவப்பட்டது அவர்கள் கல்யாணத்தின் போது.
சில நாட்கள், மிக சந்தோசமாகத்தான் இருந்தார்கள், நண்பர்கள் யாரேனும் அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தால், கூடிய சிக்கிரமே கொஞ்சல் சத்தம் கேட்க தாங்காமல் வெளியேறி விடுவார்கள்.
ஒரு நாள் திடிரென, முழு பாட்டில் சிக்னேச்சருடன் எங்கள் அறையில் அமர்ந்திருந்தார், ஆரம்பத்தில் எதோ விசேசமாக இருக்கும் என கருதி, ஆளுக்கொரு குவளையுடன் அவர் அருகில் அமர்ந்தோம்.
யார் முகத்தையும் பார்க்க தயங்கியவாரக தலை குனிந்து அழுது கொண்டிருந்தார், ஒன்றன் பின் ஒன்றாக, அவர் சொல்ல சொல்ல, அதிருப்தி எங்கள் தலையையும் சுற்றத்தொடங்கியது.
அவள் தொலைபேசியில், இருந்த மொத்த தகவல்களும், பாலியல் சார்ந்தவைகளாக இருந்திருக்கின்றன, அவள் நிறைய பேருடன் ஒரே போல் கொஞ்சுபவள் என தெரியப்படுத்துகிறது, அவளின் கொஞ்சல்களுடனான குறுந்தகவல்கள், இவரை கட்டியனைத்த அதே நேரத்தில் அனுப்பப்பட்டிருந்ததை அழுத்தமாக நொந்து கொண்டார்.
வேறு யாராயினும், அவள் முகத்தில் ஆசிட் அடிக்கவே துணிந்திருப்பார்கள்.
ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவள் முகத்தையும் சேர்த்து மொத்தமும் மறக்க வேண்டும் எனக் கூறினார்.
" எங்க போனாலும் அவ நெனப்பாவே இருக்கு டா தம்பி " என சொல்லி யாரிடமும் சொல்லாமல் கண்காணாத தூரம் கடந்து போனார்.
அந்த பெண்ணை பார்க்க எங்களுக்கும் அருவெருப்பாக தோன்றியது.
தொலைபேசியில் அவளையும் தொலையசொல்லி, முடிந்தது அவளைப் பற்றின நினைவுகள்.
வெகு நாட்கள் கழிந்து அந்த அண்ணனை மிண்டும் சந்தித்தேன்.
தன் மனைவி குழந்தையுடன், சந்தோசமாகத்தான் இருந்தார்
அவர் மனைவியின் கழுத்தில் தொங்கும் தாலி, என்னுள் பல நினைவுகளை உசலாட்டின.
ஒரு விழ்த்தப்பட்ட காதல் சாம்ராஜ்யம, மீண்டும் புதுப்பொழிவு அடையும் காட்சியாக என் கண் முன்னே விரிந்தது.
ஆழ்ந்து சிந்தித்தால் காதல் வெறுமையானதாக, அர்த்தமற்றதாக தெரியும் என சொல்லுவார் தந்தை பெரியார் .
காதலில் மட்டுமாவது பெரியார் வழி பற்றுவோம், இனி தொடர்ந்து.
பேசுவோம் ...