Wednesday, April 27, 2011

*காதல் பித்து

                             வருகைக்காக:

நேற்று அவன் காத்திருந்தான் என் வருகைக்காக,
 நடுவீதியில் .
இன்று அவன் காத்திருப்பான் என் வருகைக்காக,
மணமேடையில்.
நாளை நான் காத்திருப்பேன் அவன் வருகைக்காக,
சொர்க்கத்தில்

                                 அவள்:

அவள் சிரிக்கும் பொழுது,
 என்னை காண துடித்து,
 வரிசையை விட்டு,
 எட்டி நிற்கும் ஒட்டறை பல்.

என் முத்தங்கள் நிரப்ப,
இன்னும் இன்னும், அதிகம் ஆகும்,
அவள்  கன்னத்து குழிகள்,
அதனுடன்,
காதல்,
வெட்கம்,
நளினம்,
இவையாவும்,
நிறைந்தவள் அவள்.


                              மனைவி:

காதல்,
வெட்கம்,
நளினம்,
சிரிப்பு,இதனுடன்

தோல்வி,
வெறுப்பு,
அழுகையும் கூட, நிறைந்தவள் தான் அவள்,

ஆயுனும் நான் அவளை காதலிக்கிறேன்,
அவள் என் மனைவி

-மீனா விக்னேஷ்

1 comment: