Thursday, April 28, 2011

ஜோயலும் சுந்தரராஜ பெருமாளும்

1

ஜோயல்,எதை வேண்டுமானாலும் விட்டு கொடுத்துருவான்,ஆனா தன்னோட நம்பிக்கைக்கு எதிரா யாராவது பேசும் போது மட்டும் , அவனால பொறுத்துக்க முடியாது,

ஜோயலுக்குன்னு சில அடையாளங்கள் இருக்கு,அது அவனை, எல்லோரிடமிருந்தும்  வேறு படுத்தி காட்டும்.

அவனோட, கடவுள் நம்பிக்கைக்கு எதிரான கருத்து,சில சமயம், அவன் நண்பர்கள வெறுப்படைய செய்யலாம்.

 கடவுளுக்கு எதிர ,நண்பர்கள் கூட,வாதாடுவது தான்,
ஜோயலுக்கு  விருப்பமான பொழுதுபோக்கு,

அப்படி, எவ்வளவு பொழுது போனாலும், போக்கு மாறுவதா தெரியல,

இப்படி தான் ஒரு நாள் , கல்லூரி விடுதியுள, கிருஸ்துவ மாணவர்களுக்காக,மாலை நேரத்துல ஜெபம் நடந்தது .

"உள்ளதை உள்ளதென்றும்,இல்லத்தை இல்லதென்றும் சொல்லுங்கள்:இதற்கு மிஞ்சினது தீமையுனால் உண்டாயிருக்கும்."
"கண்ணனுக்கு கண்,பல்லுக்கு பல் என்று,உரைக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
நான் உங்களுக்கு சொல்லுகிறேன்:தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம்:ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பி கொடு"
"இடர் படும் சகோதரனை,எழு முறை அல்ல,எழு எழுபததாயிரம் முறை,மன்னிப்பாயாக"

இப்படியாக,ஜெப குழு தலைவர் , தன்னோட பிரசங்கத்த முடிக்கும் போது,

அந்த வழியா,ஜோயல் நடந்து போயிட்டு இருந்தான்,

பிரசங்கம், ஜோயல் காதுகள்ளையும் விழுந்தது, கடவுள் சித்தம் போல,

"ஜோயல், கொஞ்சம் இங்க வர முடிமா?"

ஜெபகுழு தலைவர், ஜோயல அழைக்கிறாறு.

"ஏன் ஜோயல் நீங்க ஜெபத்துல கலந்துகிறதில்லையே ?"

"ஆமா, அதனால எனக்கு ஒன்றும், லாபம் இல்ல, நஷ்டம் இல்ல."

"இப்படியான செயல்கள், உன்ன எரிநரகத்துக்கு கொண்டு செல்லும்,தெர்யுமா?"

ஜோயல் முகத்தில் சிரிப்பு .

இப்படியே அதிக நேரம், பிரசங்கம்,தொடர்ந்து கொண்டே போச்சு , ஜோயலும் ரொம்பவே பொறுமையா இருந்தான்.

ஒரு கட்டத்துல ஜோயல், அவர் வலது கன்னத்துல, ஒரு அறை அறஞ்சான்,

"ஓ சாத்தானே தூரம் போ,இச்சகோதரனை விட்டு விழகு"

தன் கையில் இருந்த சிலுவையை  கொண்டு, ஜோயல் மண்டையில் ஒரு போடு.

அங்கேயே அவன் மயங்கி விழுந்துட்டான்.

அடுத்த நாள், இரண்டு பேரையும் விசாரனைக்க அழைத்திருந்தாங்க .

ஜோயல், தன்னோட முழு தப்பையும், ஒப்பு கொண்டான்,அதற்கு மன்னிப்பும் கேட்டான்.

"சரி,என்ன காரணம்,நி ஏன் அவரை அறையணும்?"


" உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பி கொடு"
"இடர் படும் சகோதரனை,எழு முறை அல்ல,எழு எழுபததாயிரம் முறை,மன்னிப்பாயாக" 

"இது மாதிரியான, பிரசங்கங்களை கேட்டு,நான் ஏமாந்துட்டேன்,அதுதான்,கோபம்,தயவு செய்து மன்னிச்சிடுங்க"

ஜெபகுழு தலைவர், தன் தவறை முழுமையா,உணர்ரதுக்குள்ளேயே,ஜோயல் வெளிய போயிட்டான்.

2

அவனோட இன்னொரு அடையாளம்,கிரிகெட்.
கிரிகெட் விளையாடும் போதும் சரி,பார்க்கும் போதும் சரி,
ரொம்பவே வித்தியாசமான ஜோயல, பார்க்க முடியும் .

அப்படியான நேரங்கள்ல,ஜோயல எல்லாருக்கும் பிடிச்சு, போறது ஆச்சரியமான விஷயம் இல்ல,

மதம்,நம்பிக்கை, இன்னும் எத்தனையோ, விஷயங்களை கடந்தவங்க தான்,
கிரிகெட் ரசிகர்கள்.

3

இன்னும் ஓர் அடையாளம்,அது ரம்யவுடனான காதல்.

முதல் பார்வையிலே, வசீகரிக்க கூடியவன் ஜோயல் .
ரம்யாவிடம் தான் அதை  அப்பட்டமா உணர முடிஞ்சது,

இவ்வளவு அன்பான ஜோயல,ரம்யாவுடன் மட்டும் தான்,பார்க்க முடியும்.

காதல்,இந்த வார்த்தைக்கு,சரியான அர்த்தம் தேடி தந்தாங்க.

ரம்யாவுக்கு,சுந்தர் ராஜா பெருமாள் , மீது அதீத நம்பிக்கை.

ஜோயலுக்கு,அந்த விஷயத்தில்,கொஞ்சம் சங்கடம் தான்,ஆனாலும் அவள் அன்புக்க அதை விட்டு கொடுத்தான்,

ஜோயலோட நம்பிக்கைகாக,ரம்யாவும் தான்,விட்டுகொடுக்கிறா.

அந்த இடத்தில,தான் அவங்க காதல், அதிகம் ஆனது.

எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம,ஜோயல் தன்னோட,வாழ்க்கை துனை ஆகணும்னு,சுந்தர் ராஜா பெருமாள் கிட்ட வரம் கேட்டிருந்தா,

அதுக்கு அவரோட பதில் "அப்படியே ஆகட்டும் "

ஜோயல் யாரிடமும், எந்த வரணும் கேக்கல,ஆனாலும் கிடைத்தது வரம்,
அது தான் ரம்யா.

ரொம்பவும் அன்பா வாழந்தாங்க,அவங்களோட அன்புக்கு அடையாளமா, பிறந்த குழந்தை, அஷ்வின்.

4

இப்படியான வாழக்கைல,ரம்யாவோட எந்த ஒரு வேண்டுதலும்,பொய்யானதில்லை,

நாள்தோறும் வேண்டுவது ஒன்னு தான்,ஜோயல் என்கூட  அன்பா இருக்கணும்,

என்னைக்குமே அன்பாகத்தான் இருப்பான்.

ஒரு நாள் எதோ பண்டிகை போல,வீடெல்லாம் ரொம்ப சுத்தமா,பிரகாசமா இர்ருந்தது,

இன்னும் ஒரு சிறப்பு,உலக கோப்பை கிரிகெட் இறுதிபோட்டி.

சொல்லவே வேண்டாம், ஜோயலோட கவனம் எல்லாம்,கிரிகெட் மேல தான்.

ரம்யாவோட கவனம் எல்லாம்,கொஞ்சம் உடல் நலம் சரி இல்லாத,அஷ்வின் மேலதான்,

போட்டியுல ,இந்தியாவோட நிலைமை கொஞ்சம் மோசம் தான்,தோத்துருவோமோ ? தோத்துருவோமோ ? என்ற கேவி தான்,ஒவ்வொரு ஓட்டத்துக்கும்.

தோத்து தான் போச்சு,ஜோயலுக்கு இதவிட கடுப்பான விஷயமே,வேற எதுவும் கெடையாது,
ரொம்பவும் கடுப்பு,

அதேநேரம்,ரம்யாவோட இடது கைல,மணி சப்தம்,வலது கைல தீப ஆராதன.

ஜோயலுக்கு வந்துச்சு பாரு கோவம்,ஒரே அறை,தீப ஆராதனயோட சேர்ந்து.சுந்தரராஜபெருமாளும்,குப்பயுல கடந்தாறு.

ரம்யா,அப்படியே சோர்ந்து போய் ஒரு மூலைல சாஞ்சுட்ட,அஷ்வினும் கூட,

அட கடவுளே,ஜோயல் இவ்வளவு கெட்டவனா,சகிக்க முடியல.

சுந்தரராஜபெருமாளோட வரம்,எங்க போச்சு??

அத்தெல்லாம் ஒன்னும் ஆகல,வரம் அப்படியே தான் இருக்கு,

கொஞ்ச நேரம் தான்,அத்தனை கோபமும்.
அதுக்கப்றம் அவன் கெஞ்சுன கெஞ்சலும்,கொஞ்சுன கொஞ்சலும்,
ரொம்பவே அதிகம்,கிரிகெட்ட விட ரொம்பவே நல்ல முடிவு தான்,

ரம்யாவும் அப்படி தான்,ரொம்ப வேகமாவே, ரம்யாவின் முகமும் மலர்ந்து விட்டது.

ஜோயல் அஷ்வின தூக்கி கைல வச்சுகிட்டான்,
"வாடா செல்லம் ஹாஸ்பிட்டல் போகலாம் "
"பாரு இவன் ஒடம்பு ரொம்ப சரி இல்ல"

மூணு பெரும் சேந்து,போகும் வழியுல,ஜோயல் ஒரு கேள்வி கேட்டான்.

யாரிடமும் இதுவரை கேக்காத கேள்வி,

இப்போ கூட ரம்யாவோட,சந்தோசத்துக்காக கேட்டான்.

"சாமி கிட்ட என்ன வேண்டிகிட்ட"

"அஷ்வின ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகும் போது நிங்களும் கூட வரணும்னு வேண்டிகிட்டேன்ங்க"

"உன்னோட ஆசையை பெருமாள் நிறைவேத்திட்டாரா ?"

"ம்ம் ஆமாங்க ,"
என கூறும் போது அவன் கைகளை இறுக்க அணைத்து கொண்டால்.

வரம் கொடுத்த சுந்தரராஜ பெருமாள் இன்னும் குப்பையில் தான் கிடக்கிறார்....

                                                                                                        -மீனா விக்னேஷ்   















  




  

No comments:

Post a Comment