நான் மத்தியஅரசு ஊழியன்,
சம்பளப் பணமெலாம்,
தண்ணி,தம்,பொண்ணு குட்டி என்று,
செலவாகி விட்டது,
லஞ்சப் பணமெலாம்,
அப்பனும்,ஆத்தாளுக்கும்,
பொழப்பு நடத்த,குடுத்தாச்சு,
மாசக்கடைசி பணமில்லை என,
இன்னும்மொரு லஞ்சம் தேடி அலைகையில்,
"ச்சி இதெல்லாம் ஒரு பொழப்ப,இப்புடி பொழைக்க,
பேசாம தூக்குல தொங்கலாம்"
என்றது என் மனசாட்சி,
சரிதான் இப்படி பேசிவிட,
வேறு யாருக்கு ,தைரியம் உண்டு.
-மீனாவிக்னேஷ்
No comments:
Post a Comment