1
பிரபா, ஒரு சிகரத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்தான்,
கொட்டும் ஆருவியின் சப்தம் அவன் காதை கிழித்துகொண்டிருந்தது,
தென்றல் காற்று அவன் தலை முடியை கலைத்து கொண்டிருந்தது,
கண்களில் விழும் காற்று அதனை கலங்கடித்து கொண்டிருந்தது,
ஒரு மரம் என்றால் கிளை கிளையாய்,இலை இலையாய் ரசிக்கத் தெரிந்தவன் பிரபா,சிகரங்கள் எனில் அது ரசனைக்குரிய பொருள்களில் மிகப்பெரிது,
கண்டிப்பாக,தேசிய விருது வாங்கித்தரும் ஓர் இலக்கியம் படைக்கும் சுழல் தான் அது.
அவன் கைகளில் காகிதங்கள் ஏதும் இல்லை,இருந்திருந்தால் விருதுகள் நிச்சயம்.
2
பிரபா ஒன்றும் இலக்கியம் படைக்க தெரியாதவன் அல்ல,தேசிய விருதுகள் கூட பரிச்சயமான ஒன்று தான்.
பிரபா ஒன்றும் ரசிக்கத் தெரியாதவன் அல்ல,பிரபாவின் ரசனையும், வெற்றிகளும் , பிரபாவையே ரசிக்க வைக்கும் அளவுக்கு சிறப்பானது,
எப்பொழுதும் பிரபாவை சுற்றிய ஒரு கூட்டம்,
பிரபாவின் ரசிகர்கள் என சொல்லி கொள்ளாத,ரசிகர் கூட்டம்,
சிலர் ரசிப்பது அவன் ஆழகு என்றால் சிலர் ரசிப்பது அறிவாய் இறுக்கும்.
நண்பர்கள் கூட்டம் அவனை எழுத்தாளனாக,பேச்சாளராக,கவிஞராக பார்க்கிறது என்றால், ஆசிரியர்கள் பார்வை அவனை விஞ்யானியாகவும்,
விரிவுரையாளர் ஆகவும் பார்க்கிறது,
அவன் பெற்றோர்களின் கனவோ அதிகாரபதவி கொண்டவன் ஆகா வேண்டும் என்பது.
இதை எல்லாம், எல்லோரும் பிரபாவிடம் சொல்லி இருகிறார்கள் என்றாலும் ,சிறிய புன்னகையுடன்,பார்க்கலாம் என, பதில் தரும் சிந்தனை படைத்தவன் பிரபா,
பிரபா வருங்காலத்தை பற்றி என்றைக்கும் சிந்தித்ததே இல்லை ,
நாள்தோருமான வெற்றிகளை ருசிக்கவே நேரம் இல்லையாம் பிறகு ஏன் வருங்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும். ஆது முட்டாள் தனமா இல்லையா ?
3
மலை உச்சில் நின்று கொண்டிருந்த பிரபா கொட்டும் ஆருவியை கூர்ந்து பார்த்து கொண்டிருந்தான்,
தியானம் செய்ய தெரித்தவன் என்றாலும் அந்த நிலை தியான நிலையாக தெரியவில்லை,
தன் வருங்காலத்தை பற்றி எதோ யோசிக்கிறான் என தெரிந்தது,
அவன் கண்களில் கண்ணீர், காற்று பட்டு வெளியாவதில்லை ஏதோஒரு கவலை பட்டு வெளியாகிறது என தெரிந்தது,
மலை உச்சி என்பதால் அது தரைமட்டதிலிருந்து மிக உயரம்,
பூமியின் ஈர்ப்பு பிரபாவை அழைத்தது போல திடிரென குதித்து விட்டான்...... !!!!!
4
மறுநாள் செய்தி கல்லூரி மாணவர் தற்கொலை காரணம் காதல் தோல்வி
-மீனா விக்னேஷ்
No comments:
Post a Comment