Wednesday, December 15, 2010

*கனவுகள்


1
"விக்கி   எழுந்திருட ஸ்கூல் போக  வேண்டாமா "
திங்கள்கிழமை,காலை நேரம் வழக்கம் போல, விக்கியோட அம்மா
அவனை எழுப்பி விடும் நேரம்   காலை 8 மணி.

 "அடுத்த  லீவுக்கு  இன்னும்  ஏழு  நாள்  இருக்கு "
திங்கள்,செவ்வாய்,புதன், என
தன் பிஞ்சு விரல்கள் ஒன்றன் பின் ஒன்றாய் விட்டு நாட்களை
எண்ணி கொண்டிருந்தான் விக்கி .

நாள்தோறும்,காலை 8 மணிக்கு எந்திரிக்கணும்,9 மணிக்கு ஸ்கூல் போகணும் ,1 மணிக்கு அம்மா  கையால  சாப்பாடு  ஊட்டி
விடும் மதியஉணவு ,2 மணிக்கு  மறுபடியும்  ஸ்கூல்.

 எல்லாரையும்  போல  விக்கியுடயதும் ஒரு  மெக்கானிகல் லைப் தான் . அனால் ஒரே ஒரு
வித்தியாசம்,எல்லாரையும் போல விக்கியோட லைப் கவலைகள் நெறஞ்சதா இல்ல,
 கனவுகள் நெறஞ்சதா  இருந்தது,
சொல்ல போன விக்கிகு கவலைன்ன என்னனே தெரியாது,
சின்ன  பையன் தானே, பாவம்,  கவலைன என்னனு  தெரிஞ்சுக்கிற
 வாய்பு இருந்திருக்காது  .

விக்கியோட  கனவுகள் எல்லாமே  திங்கள்கிழமை காலை விரல் விட்டு எண்ணும் கனவுகள்  மாதிரி
 ரொம்ப சாதாரணமான கனவுகள்,
டாக்டர்  அகனும்  கலெக்டர்  ஆகனும்னு  எல்லாம்  கனவு
 கிடையாது,
இன்னும் ஒரு பரிதாபமான விஷயம்,
விக்கிகிட்ட   யாராவது  உன்னோட  எதிர்கால  லட்சியம்  என்னனு
 கேட்டா கண்டிப்பா  அவனுக்கு  சொல்ல  தெரியாது ,
லட்சியம்ன  என்னனே தெரியாத சின்ன  பையன் ,

விக்கியோட  நகரத்துல,நெரிசலான சாலைகள் எதுவும் கிடையாது,
ஆனாலும் ஏதோ ஒன்று விக்கியோட  கண்களுக்கு வேடிக்கையாய் தெரியும்,
வேடிக்கை பார்ப்பது விக்கியோட பகுதி நேர பொழுது போக்கு,
ஸ்கூல் போவது முழுநேர பொழுது போக்காய் இறுக்கும்.

2

 யோகேஷ் தன்னோட கையுல ஒரு  நீளமான சாக்கலேட் வச்சிருந்தான்.
விக்கிக்கு  அது என்னனு தெரியாது ,
ஆது என்னனு கேக்கல ,ஆனாலும் பதில் கிடைத்தது ,

"டேய் விக்கி இது என்ன என்ன தெரியுமா இது நேச்ட்லேபவன் சாக்லேட் டா,எங்க
அப்பா மெட்ராஸ்ல இருந்து வாங்கிட்டு வந்தாரு  இது  5 ரூபா டா தெரியுமா"

5 ரூபாய்க்கு மிட்டாய் கெடைக்குமா,
விக்கிக்கு தெரிஞ்சதெலம் 25 பைசாவுக்கு 5 மிட்டாய் கெடைக்கும்  அவளவுதான்.
 "அந்த 5 ரூபாய் மிட்டாய் எப்புடி இறுக்கும்"
விக்கி  மனசுக்குள் கேள்விகள் கேட்க தொடங்கினான்.

3

 "அம்மா எனக்கு 5 ரூபா மிட்டாய் வாங்கி குடுங்கம்மா "
விக்கியோட பேச்சை அம்மா சரியாய் கவனிக்கல.
 மிட்டாய்னு கேட்டதுமே 1/4  ரூபா கொடுக்கணும்

 " ரோட்ல பாத்து போயிட்டு வாடா செல்லம் ”
அப்புடின்னு தன்னோட வழக்கமான வசனத்தையும் சொல்லி  முடிக்கணும் .

எப்பவும் ,விக்கி அந்த வசனத்தை  கேட்பதில்ல அதுக்குல ரொம்ப தூரம் ஓடிருவான்.

"என்னடா செல்லம் ஏன் நிக்கிற "
"நியும் வாம்மா"
"நா எதுக்குடா 1/4 ரூபா குடுதேன்ல அம்மாவுக்கு நெறைய வேல இருக்குடா செல்லம்
"எனக்கு 1/4  வேண்டாம் ,5 ரூபா மிட்டாய் தான் வேணும் நி வந்து வாங்கி குடு "
அம்மாவுக்கு அதிர்ச்சியாய் இர்ருந்தது 5 ரூபா க்கு யாரவது மிட்டாய் வாங்கி சாப்டுவாங்கள ?

"ஏங்க  உங்க பையன பாத்திங்களா 5 ரூபாய்க்கு மிட்டாய் வாங்கி தர சொல்றாங்க "
அப்பாவுக்கு நெறைய லட்சியம் இறுக்கும் போல,அந்த புகாரை அலட்சியமா  விட்டாரு.

நேரம் போக போக விக்கிக்கு நம்பிக்கை குறைஞ்சு போச்சு,
ஆனா  கண்டிப்பா 5 ரூபா க்கு தான்   சாக்லேட் வேணும் ,


காரணமில்லாம ஆழுக ஆரம்பிச்சுட்டான் , அழுகை,அடம் அப்பாவுக்கும்
அம்மாவுக்கும்  வெறுப்பா இருந்துச்சு,

விக்கியோட  வாழ்க்கைல ,இது எவ்வளவு வருத்தமான சம்பவம்,

அழுது அழுது ரொம்ப களைப்பாய்ட்டான்,

இவ்வளவு வருத்ததுலையும் விக்கியால  நிம்மதியா தூங்க  முடிஞ்சது  பெரிய அதிசயம் தான் ,

தூக்கத்துல நெறைய கனவுகள்,
 5 ரூபா சாக்லேட்ம்  மறந்திருச்சு, அதுக்காக அழுததும் மறந்திருச்சு.

4

இப்போ விக்கி கொஞ்சம் வளந்துட்டான், காலேஜ் படிக்கிறான்,
ரொம்ப  அறிவாளியும் கூட

தன்னோட கனவுகளுக்கு ஆசைகள்னு ஒரு பெயர் இருக்குறத தெரிஞ்சுகிட்டான்,

எதை எடுத்தாலும் எனக்கு இது  புடிச்சிருக்கு,இது என்னோட
ஆசை,விருப்பம்னு சொல்ல ஆரம்பிச்சுட்டான்.

காலேஜ்ல, விக்கிக்கு ரொம்ப பிடுச்சு போன விஷயம் மொபைல்போன்,
வேடிக்கை ,வேடிக்கை   எப்போ பார்த்தாலும் நண்பர்கள்  மொபைல்ல வேடிக்கை  தான்.

இப்போ விக்கி ஒன்னும் சின்ன பையன் இல்ல அப்பாட்டையும்
அம்மாட்டயும் எதுக்காகவும் அடம் புடிக்க வேண்டிய அவசியம் இல்ல.

அதுக்கு  பதிலா ,மொபைல்ல  mp3,fm,கேமரா ,ப்லுடூத்னு  எல்லா கட்டமைப்பு பத்தியும் விக்கியால விவரிக்க  முடியும்.

விக்கி வளர  வளர ,அவனோட  அம்மாவும் அப்பாவும் கூட கொஞ்சம்  வளந்திருந்தாங்க
விக்கியோட ,மொபைல்  பற்றிய அசைகள  அவங்களால புரிஞ்சுக  முடியும் ,

விக்கி அப்பா, அவனுக்கு  5000 ரூபா  மொபைல்  வாங்கி  குடுத்தாங்க ,
5 ரூபா  மிட்டாய்கு  ஆழுக வேண்டி இருந்த விக்கி  5000 ரூபா  மொபைல்கு  அழுக வேண்டிய  அவசியம் இல்ல
!!!

இது ஒன்னும்  ஆச்சரியமான  விஷயம்  இல்ல.
 ஏன்னா  விக்கி தான் இப்போ பெரிய  பையன்  ஆயிட்டானே

5

இப்போ விக்கி இன்னும் ரொம்ப  வளந்துடன்,
 தன்னோட   கனவுகள் ,ஆசைகள்  இத்தோட ரசிக்கவும்  கத்துகிட்டான் .

ரசனையோட சேந்து காதலும் வந்துருச்சு .

தன்னோட ஒவ்வொரு  ஆசைகளையும் விவரிக்க தெரிஞ்ச  விக்கிக்கு   காதலை மட்டும் விவரிக்க தெரியல.

சாக்லேட்  மாதிரி ஆழுது வாங்க முடியாது ,
மொபைல்  மாதிரி  அப்பாட்டையும் அம்மாட்டயும் விவரிக்க முடியாது,

விவரிக்க வேண்டிய ஆவசியம் இல்ல, ஏன்னா ,
விக்கி தான்  இப்போ பெரிய பையன் ஆய்டானே.

 ஏதுக்காக? தன்னோட  காதல அப்பாகிட்ட  விவரிக்கணும்.
எல்லாமே விக்கியோட இஷ்டம் தான் அவனோட வாழ்க்கைல யாரும் குறிக்கிட முடியாது,

விக்கி இன்னும் இன்னும் வளந்துகிட்டே தான் போவன்.
அவன் கனவுகள் கூட  வளர்ந்து கொண்டு தான் போகும்,  ஆனால் அது வாழ்க்கை, குடும்பம்,லட்சியம்,இறப்பு எனும் பெயர்  கொண்டிருக்கும் .
                                                                                           
                                                                                                              - மீனா விக்னேஷ்

No comments:

Post a Comment