பலமுறை படித்தும் புரியவில்லை,
உன் பார்வையின் அர்த்தம்.
அது என் பார்வையில் உனக்கு புரிந்ததென்றால்,
அப்படி பார்கதே அடியே.......
உன் கவனம் என்மிது என்றால்,
என் கவனம் யார்மிதும் இல்லை.
பலரின் கவனம் நம்மிது என்ற போதும்.
என் மனதை உடைத்து,
இதயம் கிழிக்க துணிவுள்ளவள், நீ
என்றால், அதில் உன்முகத்தை காட்டும்,
துணிவுள்ளவன் நான்.
என் காதல் உண்மை என்றால்,
பணமும் பொருளும் பொய்யாவதில்லை,
பணமும் பொருளும் உண்மையென்றால்,
என் காதல் பொய்யானது உன் வாழ்கையில் .
நம் காதல் பூ என்ற போது, அது காயாகி,
கனியாகி ருசிக்கையில்,புளித்தது என்றால்,
அந்த கனியின் விதையில் வளரும் செடி,
செடியில் பூக்கும் பூ,உன் மகளின் காதல் ஆகும் .
அந்த பூவில் காய்கும் காய்,
கனியானால் அதுவும் புளிக்கத்தான் செய்யுமோ ???????
- மீனா விக்னேஷ்
No comments:
Post a Comment