அது ஓர் அடர்ந்த முங்கில் காடு,ஆற்றுப்படுகையிலிருந்து சற்று விலகி,
சாக்கடையும் ,சகதியும் கலந்திருந்த இடத்தில்,மிக நெருக்கமாக,
ஆண்,பெண்,சாதி,மதம் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் இன்றி வெவ்வேறு,வயதுகளில் வளர்ந்திருந்தது அந்த முங்கில் சமூகம்.
ஒரு சிறுவன்,அவ்வழியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான்,அவன் கையில்
கதிர் அருவாள் வைத்திருந்தான்.
திடிரென,சிறிதாய் வளர்ந்திருந்த முங்கிலை வெட்டி தன் கையில்
வைத்துக்கொண்டான்,
மனிதர்களை போல்,வெட்டப்பட்டதும்,மூங்கில்கள் இறந்து விடுவதில்லை,
சிறுவனின் கையில் இருக்கும் அந்த முங்கிலும் உயிரோடுதான்,
இருக்கிறது,ஆனால் தான் என்னவாக போகிறோமோ,தன்னை வெறுமென,
எரிந்து விட்டு போவானோ என பதற்றம் கொண்டிருந்தது அந்த மூங்கில்.
இதே காரணத்தை எண்ணியும்,பிரிவை தாங்காமலும்,வெட்டப்பட்ட மூங்கிலின் அருகிலிருந்த மற்றுமொரு மூங்கில் அழுது கொண்டிருந்தது,
அதன் மேற்ப்பரப்பில் மெல்லிய வெடிப்பு ஏற்ப்பட்டு,அதன் வழியே,
விசும்பல்களுடன் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது,
மற்ற மூங்கில்கள் மொத்தமும்,கூட்டமாக அழுகைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது .
மூங்கிலின் அழுகையையோ,விசும்பலையோ,ஆறுதல்
வார்த்தைகளையோ,அச்சிறுவனக்கு கேட்கும் வாய்ப்பு இல்லை.
ஏனெனில்,மனிதர்களுக்கும் ,தாவரங்களுக்கும் இடையான பரிணாம வளர்ச்சியில் நெடுந்தூர வித்யாசம் உண்டல்லவா !
அந்த மூங்கில் கூட்டத்தினுள்,ஓர் வயது முதிர்ந்த மூங்கில் மட்டும்,
வெட்டப்பட்ட முங்கிலையே தொடர்ந்து ஏறிட்டுக்கொண்டிருந்தது.
சிறுவனின் சிறிது நேர நடவடிக்கையிலே,அதன் முகத்தில் மகிழ்ச்சி
ஏற்படத்தொடங்கியது,
அச்சிறுவன்,வெட்டிய மூங்கிலின் மேற்ப்பரப்பை நன்கு சீவி,அதில் துளையிட்டு புல்லாங்குழல் செய்து,மென்மையாக இசைக்கத் தொடங்கினான்.
இதை பார்த்துக் கொண்டிருந்த,வயதான மூங்கில்,மற்றவைகளிடமும் காட்டியது,தங்கள் கூட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டாலும்,இனிமையான இசை உருவாக்கும் கருவியானதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தது ,ஆறுதல் அடைந்தது,முங்கில்களும் இசையை உணருமா எனக்கேட்டால்,ஆம் நிச்சயமாக இசை என்பது இனம்,மதம்,மொழிகளை கடந்து உயிரின பாகுபாடும் பார்ப்பதில்லை,அனைத்திடமும் கலந்திருக்கிறது .
இந்நிகழ்வை தொடர்ந்து,நாம் அணைவருமே புல்லாங்குழல்கள் ஆக முடியாதது ஏன்?என விவாதிக்க தொடங்கியது,
தங்களை சுற்றிலும் சாக்கடை நிரம்பி இருப்பதையும்,முள் செடிகளால் சூழப்பட்டு பிறர் பார்வையில் படாமல்,மேற்பரப்பில் வெடிப்பு கண்டு,சரிவர வளர்ச்சி இல்லாமல் இருப்பதையும் விவரித்து கொண்டிருந்தது,அந்த வயதான முங்கில்.
இதனால் மனமுடைந்த மூங்கில்கள்,இனியாவது தங்களிடமிருந்து பிறக்கும் மூங்கில்கள் நல்ல முங்கில்களாக வளர வேண்டுமென விரும்பியது,
அதனுடைய கொண்டாட்ட காலங்களான,ஓர் காற்றடிக்கும் நேரத்தில்,
மூங்கில் கூட்டம் மொத்தமும் ஒருமித்த வேகத்தில்,
தங்கள் விதைகளை,நீரோட்டமிக்க,சூரிய ஒளி கிடைக்கும்,பிறர் கண்களில் படும்படியான இடத்தில் தூவின.
அவைகளின் ஆசைப்படியே,புதிதாக ஓர் முங்கில் கூட்டம் வளரத்தொடங்கியது,விளையும் பொழுதிலே அவைகள் நல்ல வளர்ச்சி அடைவதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டது அப்பழைய மூங்கில்கள்.
புதிய முங்கில்களிடம் அதன் வளர்ச்சியை சுட்டிக்காட்டி,நீங்கள் எல்லாம் எங்களை போல் அல்ல,இந்த ஆற்றுப்படுகை உங்கள் உலகம் அல்ல,நீங்கள் எல்லாம் புல்லாங்குழல் ஆகும் வாய்ப்பு கொண்டவர்கள்,அதுவே உங்கள் லட்சியம் என திருத்தமாக அறிவுரித்தியது.
எல்லா உயிர்களுக்கும் பொதுவான நீதியாம்,வயது முதிர்ச்சி காரணமாக அப்பழைய மூங்கில்கள் ஒவ்வொன்றாய், சேதமடைந்து விழத்தொடங்கின,
ஒவ்வொரு முங்கிலும் தான் இறக்கும் தருவாயில்,வலிகள் நிறைந்த குரலுடன்,புதிய முங்கில்களை நோக்கி,
நீங்கள் எல்லாம் புல்லாங்குழலாவீ ர்கள்,உங்களிடமிருந்து இசைக்கப்படும் மெல்லிய இசை எங்கள் ஆன்மாவை வந்து சேரும் ஆகையாலே வருந்தாதிர்கள் என சொல்லி விட்டு இறந்து போயின.
புதிய மூங்கில்கள் நன்கு வளர்ச்சி கண்டதும்,தங்கள் மூதாதையரின் ஆசையை நிறைவேற்ற ஏங்கித் தவித்தது,தங்களை கடந்து செல்லும் மனிதர்களை பரிதாபம் கலந்து பார்த்துக் கொண்டிருந்தது.
ஒரு நாள் அரசு அறிவிப்பின் படி,ஆற்றினை சுத்தம் செய்வதாக சொல்லி,பெரிய இயந்திரங்களை கொண்டு,மொத்தமாக எல்லா முங்கில்களையும் வெட்டி எடுத்தார்கள்,
தாங்கள் வெட்டப்பட்டதும்,அதனிடையில் கூச்சலும்,கலகலப்பும் தாங்க முடியவில்லை ,இனி தாங்கள் புல்லாங்குழல் ஆகும் நாள் நெருங்கிவிட்டதாக மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது,
ஆனாலும் அவைகள்,பாடை கட்டவும் ,மண்டபம் அமைக்கவும்,பிறரை அடிக்கவுமே பயன்படுத்தப்பட்டன.
ஆரம்பத்தில் மிகுந்த குழப்பம் அடைந்திருந்தது அவைகள்,விதி என்னும் சொல்லை அறியாத அவைகளால் வாழ்க்கையின் இயல்பை புரிந்து கொள்ள முடியவில்லை.
மிகுந்த பயன்பாட்டுக்குப் பின் பாதிக்கு பாதி சிதிலமடைந்த பிறகு,நல்ல முங்கில்களாக வளர்ந்த அவைகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால்,இனி தான் புல்லாங்குழலாக முடியாதென புரிந்து கொண்டது.
இறந்து போன மூங்கில் மூதாதையர்கள்,இன்னுமும் கூட இனிமையான இசையை எதிர்நோக்கி,காத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
- மீனாவிக்னேஷ்

No comments:
Post a Comment