நண்பர்கள் அனைவரும்,அன்று கதை பேசிக்கொண்டிருந்தோம்,
திரைப்பட உதவி இயக்குனர்கள் ஆதலால், கதை பேசுவதில் ஆர்வம் அதிகமே,
அதிலும் குறிப்பாக என் நண்பன் பாலு,
அன்று மட்டும் ஏனோ பாலு மௌனமாகவே இருந்து கொண்டிருந்தான்,
கதை கூற சொல்லி கட்டாயப்படுத்தியதில்,இப்படியாக தொடங்கினான்,
"மச்சான் எனக்கு மூடே இல்ல, எதோ நீங்க கம்பெல் பண்றதால சொல்றேன்,
பட் நீங்க நெனைக்கிற மாதிரியான கதையா இருக்காது,
கொஞ்சம் சோகமா,அழுத்தமா இறுக்கும்,
ஆக்சுவலி இது எங்க அப்பாவோட கதை,
ஓகேயா சொல்லவா வேணாமா?"
கொஞ்சம் கடினமான கேள்வி தான்,!
சோகமான கதை கேட்கும் மனநிலை யாருக்குமே இல்லை ,ஆனாலும் பாலுவின் மன ஆறுதலுக்காக கேட்க தொடங்கினோம்.

அவனுடைய அப்பா,அதிகமாக மது அருந்துவாரம்,
ஒவ்வொரு நாளும்,எதோ ஒரு தெரு முனையில்,சாக்கடைகருகில்.
அநாகரிகமாக படுத்துக்கிடப்பாராம்,
ஒரு நாள் அடிபட்ட தன் தந்தையை ,வண்டி ஒன்றில் ஏற்றி கொண்டிருந்தானாம்.
உதவிக்கு வந்தவர்களை அவர் கண்டபடியும் திட்டி விட,கோபம் கொண்ட அவர்கள்,அவரை அடிக்க தொடங்கினார்களாம்,அதனை தடுக்க முடியாத தன் நிலைமையை,வார்த்தைகளால் விளக்க முடியவில்லை அவனால்.
தன் நண்பர்கள்,உறவினர்கள் எல்லாரிடமும் அவன் அப்பா கடன் வாங்கியிருப்பாரம் ,அவரது பொய்யான வாக்குறிதிகள்,ஏளனப்பார்வைகளாக இவன் மீது தான் வந்து விழுமாம்.
திடிரென்று ஒரு நாள், தன் மகளின் திருமணத்திற்கு பணம் சேர்த்து வருவதாக கூறியிருந்தாராம்,மகிழ்ச்சியான விஷயம் தான் ஆனாலும் அவர் சேமிப்பிலிருந்து வெறும் 2000 ருபாய் மட்டுமே அவர்களால் பெற முடிந்ததாம்.
தன் சொந்த மகளின் திருமணத்தில்,யாரோ ஒரு மூன்றாவது மனிதரை போல்
சுற்றி வரும் தன் தந்தையை காணும் மகனுக்கு சந்தோஷம்,சிரிப்பு எப்படி இருக்கும்.
தன் தங்கையின் திருமணத்தை சித்தப்பா மார்களால் தான் நடத்தி முடிக்கப்பட்டதாம் ,
நன்றி கடனுக்கே வட்டி கொடுக்கும் காலம் இது,இந்நாணய கடனை மட்டும் விட்டுவிடுமா என்ன ? அடைக்க தான் வேண்டும் எனில் அதன் ஆதாரம் என்ன?
நன்றாக படித்தானே தவிர,நிறைய படிக்க வில்லையே.
இறுதியாக அவன் அப்பா இறந்த விதத்தை கேட்கவே கடினமாய் இருந்தது.
அதிகமாக மது அருந்தி,உயர் ரத்த அழுத்தத்தில் மாறு கால் மாறு கை இழுத்து கொண்டு,இனி உயிர் பிழைக்கவே முடியாது எனும் நிலையில் படுத்த படுக்கையாக ஐந்தாறு நாட்கள் விட்டிலே கிடந்தாராம்,
கடைசி ஆசையாய் இருக்குமென,அவர் விரும்பி அருந்தும் மதுவை சொட்டு சொட்டாக அருந்த செய்தார்களாம்,ஆயினும் அவர் உயிர் விட வில்லை,
பிறகு எப்படி வலுக்கட்டாயமாக மூச்சு அடைக்கப்பட்டு தன் உறவுகளாலே கொல்லப்பட்டிருக்கிறார் .
கதை முடியும் நேரம் அனைவரின் வருகையும் நிறைவு பெற்றிருந்தது,
"சியர்ஸ்" எனும் வார்த்தையில் மது குவளைகள் மோதும் சப்தத்துடன் தொடங்கி,அதே குவளைகள் உடையும் சப்தத்துடன் முடிவு பெற்றது,
பாலுவின் பிறந்தநாள் விழா.
-மீனா விக்னேஷ்

No comments:
Post a Comment